இளவாலை தொழிற்பயிற்சி நிலைய பெயரில் நடத்தப்பட்ட விபச்சார விடுதி!

கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் சில காலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்தனர்.
இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் விபச்சார விடுதியின் முகாமையாளராவார்.
அது இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் மையமாக பராமரிக்கப்பட்டு வந்தாலும், அங்கே விபச்சாரம் நடந்துள்ளதாக இளவாலை போலீசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண பகுதிகளை சேர்ந்த பெண்கள் எனவும், கொழும்பில் இருந்து வரும் பெண்களும் கடந்த காலங்களில் அந்த இடத்தில் தங்கி விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் காங்கசந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இளவாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.