இ.போ.ச. பஸ் விபத்தில் 18 பேர் காயம்!

இ.போ.ச. பஸ் ஒன்று சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 18 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து ஹொரவப்பொத்தான நோக்கிப் பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து தம்புள்ளை – நாவுல, உடதெனிய பிரதேசத்தில் நேற்று (19) மாலை இடம்பெற்றது.
மேற்படி விபத்தால் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான பல மின் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகள் மற்றும் மதில் என்பன சேதமடைந்தன.
அதேவேளை, விபத்து இடம்பெற்ற வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.