தொழுகை நேரத்தில் ஹனுமன் பஜனை – கடைக்காரர் மீது சரமாரி தாக்குதல்!
தொழுகை நேரத்தில் ஹனுமன் பஜனை பாடல்களை ஒலிக்க செய்த கடைக்காரர் தாக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு, நகரத்பேட்டையைச் சேர்ந்தவர் முகேஷ் குமார்(40). அந்தப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஹனுமன் பஜனை பாடல்களை ஒலிக்க செய்துள்ளார்.
அப்போது, 5 பேர் அங்கு வந்து, அருகிலுள்ள மசூதியில் ரம்ஜான் நோன்பு தொழுகை நடக்கிறது. அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க செய்வது அவர்களுக்கு தொந்தரவாக உள்ளது.
எனவே சத்தத்தை குறைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், முகேஷ் அதற்கு மருப்பு தெரிவித்த நிலையில் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சுலைமான் (28), ஷானவாஸ் (29), ரோஹித் (25) உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சுலைமான், ஷானவாஸ், ரோஹித் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா காங்கிரஸின் ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்டனம் தெரிவித்தார். இதற்கு கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, இந்த பிரச்சினையை பாஜகவினர் அரசியலாக மாற்றி வருகின்றனர்.
இது இரு மதத்தினர் மத ரீதியாக மோதி கொண்டதால் ஏற்பட்டதல்ல. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இருக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு சட்டப்படி தண்டனை கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சி இந்த வாரம் முடிவு
இளவாலை தொழிற்பயிற்சி நிலைய பெயரில் நடத்தப்பட்ட விபச்சார விடுதி!
இ.போ.ச. பஸ் விபத்தில் 18 பேர் காயம்!
தமிழக – வடக்கு கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கவே டக்ளஸ் முயற்சி – சுரேஷ் பகிரங்கக் குற்றச்சாட்டு
இ.போ.ச. பஸ் விபத்தில் 18 பேர் காயம்!
தமிழக – வடக்கு கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கவே டக்ளஸ் முயற்சி – சுரேஷ் பகிரங்கக் குற்றச்சாட்டு
திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்!
கோப் குழுவிலிருந்து 7 எம்.பிக்கள் விலகல்
கல்வி அமைச்சுடன் மைக்ரோசொவ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்து
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணிலே! – செந்தில் தெரிவிப்பு
அதிமுக மக்களவை முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் – அறிவித்த பொதுச்செயலாளர் இபிஎஸ்..!