ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி?

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், அரசாங்கம் முதலில் பொதுத் தேர்தலை நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பது குறித்து பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும் இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை அரசியலமைப்பு ரீதியாக நடத்த வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முடிவாகும். அண்மையில் ஜனாதிபதி அமைச்சரவையைக் கூட்டி அதுபற்றி அறிவித்தார்.