தயாசிறி தலைமையில் புதிய கூட்டணி உதயம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி இன்று (20) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பலர் கலந்துகொண்டனர்.
சில அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் மனிதநேய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.