யாழில் கடலில் மூழ்கி இருவர் பரிதாபச் சாவு!

யாழ்ப்பாணம், இளவாலை – சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று (20) நீராடச் சென்ற மூவரில் இருவர் காணாமல்போன நிலையில், இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நாவற்குழியைச் சேர்ந்த சிவநேசன் திவ்யன் (வயது 21), செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த தேவன்கருணதாசா யூட் (வயது 36) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் இருவர் என மூவர் கடற்கரையில் நீராடிய நிலையில் இருவர் அலையடித்துக் காணாமல்போய் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.