12 தமிழ் அரசியல் கைதிகளையும் விரைவாக விடுதலை செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும் தேர்தலுக்கு முன்னர் விரைவாக விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் வலியுறுத்தினார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் அரசியல் கைதிகள் பலர் நீண்ட காலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
இதற்கமைய சிலர் விடுவிக்கப்பட்ட போதிலும் இன்னமும் 12 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆகையினால் அவர்கள் அனைவரையும் விரைவாக விடுவிக்க ஐனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.” – என்றார்.