அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அமலாக்கத்துறைால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மதுபானக்கூடங்களை தனியார் அமைப்பினர் நிர்வகிக்கும் வகையில் டெல்லியில் அண்மையில் மதுபானக் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே துணை முதலமைச்சராக இருந்த மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பல முறை சம்மன் அளித்தும் ஆஜராகாமல் இருந்து வந்த முதலமைச்சர் கெஜ்ரிவாலை நேற்று அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
துணை முதலமைச்சராக இருந்த, மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங், பார்திய ராஷ்டிரிய சமிதி கட்சி சட்டமேலவை உறுப்பினரான கவிதா ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு மருத்துவப் பரிசோதனை முடிந்த நிலையில்,அவர் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இதனிடையே கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்றும் விசாரணைக்கு வர இருக்கிறது. ஜெக்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் இன்று போராட்டங்களையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படும் அர்விந்த் கெஜ்ரிவாலை 10 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை கோரும் அவகாசத்தை நீதிமன்றம் அளிக்குமா இல்லை நீதிமன்றக் காவல் மட்டும்தான் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
மேலதிக செய்திகள்