ரஷ்ய தலைநகர் மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் பலி.(Video)

ரஷ்ய நாட்டு தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை அரங்கு கூடத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சுமார் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் .
அந்த நாட்டில் அண்மைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிக பயங்கரமான தாக்குதலில் இது ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை அன்று அந்த நகரில் அமைந்துள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.துப்பாக்கியுடன் அரங்கத்துக்குள் நுழைந்த சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் இந்த தாக்குதல் குறித்த விவரம் உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த சூழலில் தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி என செய்தி முகமை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.