9 பாமக வேட்பாளர்கள்: கடலூர்- இயக்குநர் தங்கர்பச்சான்; திண்டுக்கல்- திலகபாமா!

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாமகவின் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், திண்டுக்கல் தொகுதியில் திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகின்றனர். லோக்சபா தேர்தலில் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடவில்லை.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. பாமகவுக்கு பாஜக கூட்டணியில் மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாமக வேட்பாளர்கள் விவரம்:
திண்டுக்கல் – திலகபாமா
அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு,
ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் – திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான்
மயிலாடுதுறை – ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார்
தருமபுரி – அரசாங்கம்
சேலம் – ந. அண்ணாதுரை
விழுப்புரம் – முரளி சங்கர்
மேலதிக செய்திகள்
இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வையுங்கள்! – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சிறீதரன் வேண்டுகோள்
சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக வாழ்வேன் – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்