தஞ்சாவூரில் நடைப்பயிற்சியின்போது வாக்கு சேகரித்த தமிழக முதல்வர்
தஞ்சாவூரில் சனிக்கிழமை காலை தமிழக முதல்வர் நடைப்பயிற்சியின்போது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைத்து பேசினார். இந்த கூட்டம் முடிந்தவுடன் காரில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார்.
தஞ்சாவூர் சங்கம் ஓட்டலில் தங்கியுள்ள முதல்வர் மீண்டும் சனிக்கிழமை மாலை புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்துக்குச் செல்கிறார்.
இதனிடையே, தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தமிழக முதல்வர் சனிக்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் முதல்வரிடம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் விளையாட்டு வீரர்களின் விருப்பத்தின்படி கைப்பந்தை அடித்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர், காமராஜர் சந்தைக்குச் சென்று வியாபாரிகள் மற்றும் காய்கறி வாங்க வந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார். அங்கும் முதல்வரிடம் வியாபாரிகள், பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள இனிப்பகத்துக்குச் சென்று தேநீர் அருந்தினார்.
சங்கம் ஓட்டலுக்கு திரும்பிய அவரை விவசாய சங்க பிரதிநிதிகளான கே.வி. இளங்கீரன், வெ. ஜீவக்குமார், தனபதி உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்த பிரசாரத்தின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் ச. முரசொலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகேயுள்ள ஊர்க்குடியில் சனிக்கிழமை மாலை நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் ச. முரசொலியையும், நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜையும் அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
பின்னர், இரவு காரில் புறப்பட்டு, தஞ்சாவூர் வழியாக திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று, சென்னைக்கு செல்கிறார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் பலி.(Video)
மேலதிக செய்திகள்
இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வையுங்கள்! – ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சிறீதரன் வேண்டுகோள்
சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக வாழ்வேன் – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
பெங்களூரு குண்டு வெடிப்பு: சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்த குற்றவாளிகள்
புத்தளத்தில் கோர விபத்து! குடும்பப்பெண் உயிரிழப்பு!! – இரு பிள்ளைகள் உட்பட மூவர் படுகாயம்.
வடக்கு தமிழ் மக்களின் வாக்குகள் சஜித்துக்கே! – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் பலி.(Video)
9 பாமக வேட்பாளர்கள்: கடலூர்- இயக்குநர் தங்கர்பச்சான்; திண்டுக்கல்- திலகபாமா!