சென்னையில் ஒன்றரை வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்- மீட்ட தீயணைப்புத் துறை!
சென்னையில் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்திரத்தை தீயணைப்புத் துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக அகற்றினர்.
சென்னை போரூரில் வசித்து வருபவர்கள் கார்த்திக்-ஆனந்தி. இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை கிருத்திக். இக்குழந்தை வீட்டில் உள்ள பாத்திரத்தை வைத்து வழக்கம்போல் விளையாடியிருக்கிறது. அப்போது ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பாத்திரத்தில் எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை சிக்கியது. எவ்வளவுவோ முயற்சித்தும் குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரைத்தை பெற்றோரால் அகற்ற முடியவில்லை. இதையடுத்து இதுதொடர்பாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை ராட்சத கத்திரி கொண்டு வெட்டியெடுத்து குழந்தையை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னே குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரம் அகற்றப்பட்டதால் அக்குழந்தையின் பெற்றோர் நிம்மதி பெருமூச்சிவிட்டனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் பலி.(Video)
மேலதிக செய்திகள்
வடக்கில் 70 வீதமான வன்புணர்வுகள் சிறுமிகளின் சம்மதத்துடனே என்று பொலிஸார் அதிர்ச்சித் தகவல்.
உரிய சிகிச்சை வழங்காமையால் 5 வயது சிறுவன் பரிதாப மரணம்!
யாழில் வீதி விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு!
வெகுவிரைவில் சிறை செல்வார் மைத்திரி! – இப்படிக் கூறுகின்றார் கம்மன்பில.
தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் இழுத்து திருச்செல்வம் சாதனை!
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் அறிவிப்பு?
கடலில் மூழ்கிப் பாடசாலை மாணவி பரிதாபச் சாவு!
அரசியல் கூட்டணியா? மே மாதத்துக்கு பின் வாருங்கள்! – எதிர்க்கட்சிகளிடம் சந்திரிகா அறிவுறுத்து.
நோ லிமிட் தீ கட்டுப்படுத்தப்பட்டது… நடந்தது என்ன என்பது பற்றிய விரிவான விசாரணை!
இலங்கையில் McDonald’s உணவகங்களை நடத்த தடை!
பிரதமர் சூட்டிய ‘சிவசக்தி’ பெயருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!
இஸ்லாமிய பெண்கள் மீது கலர் தண்ணீர் ஊற்றிய இளைஞர்கள்- அதிர்ச்சி சம்பவம்!