நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபச் சாவு!

குருநாகல் மாவட்டம், அலவ்வ – வலகும்புர மாஓயாவில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
14 வயதான நான்கு சிறுவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
நண்பர்கள் ஐவர் மாஓயாவில் (27) குளிப்பதற்காகச் சென்றபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலவ்வ மற்றும் பொல்கஹவெல பகுதிகளைச் சேர்ந்த நால்வரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.