அரவிந்த் கெஜ்ரிவாலை ED காவலில் இருந்து விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்ய கோரி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஏப். 03-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேடு தொடர்பாக 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி ஆஜராகாததால் கைது செய்யப்பட்டார்.
தன்னை கைது செய்ததை எதிர்த்தும் உடனடியாக விடுதலை செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி 7 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப். 03-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலதிக செய்திகள்
நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபச் சாவு!
யாழிலும் கோர விபத்து! விவசாயி ஒருவர் சாவு!!
நீர்கொழும்பு மசாஜ் நிலைய ஊழியர்களில் HIV தொற்று கண்டறியப்பட்ட இருவரில் , 15 வயது சிறுமியும் ஒருவர்!