இரு தேர்தல்களையும் ஒத்திவைக்க திட்டம்?
எதிர்காலத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இரண்டு பிரதான தேர்தல்களும் பிற்போடப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
புதிய தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாலும், ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்ற முன்மொழிவுகளாலும் தேர்தல்கள் தாமதமாகும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் தனித்தனியாக நடத்துவதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவழிக்க வேண்டியிருப்பதால், இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி, செலவழித்த பெரும் தொகையை மிச்சப்படுத்துவதற்கான யோசனைகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அடுத்த தேர்தல் கலப்பு விகிதாசார மற்றும் ஒற்றை வாக்களிப்பு முறையின் கீழ் நடத்தப்பட உள்ளது.
பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்ததில் 45 பேர் பலி.