இந்தியாவில் படிக்காத இளைஞர்களை விட படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பு இல்லை – ஆய்வில் தகவல்
இந்தியாவில் பள்ளி படிப்பை முடிக்காதவர்களை விட படித்த பட்டதாரி இளைஞர்கள் அதிகம் வேலையில்லாமல் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களின் எண்ணிக்கை 29.1% ஆக உள்ளது. இது வேலையில்லாமல் இருக்கும் படிக்காத இளைஞரின் எண்ணிக்கையை விட 3.4% அதிகமாகும். இதேபோல இடைநிலை மற்றும் உயர்கல்வி பயின்ற இளைஞர்களின் எண்ணிக்கை 18.4% ஆக உள்ளது.
இந்தியாவில் வேலையின்மை என்பது இளைஞர்களின் மத்தியில் ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக இடைநிலை மற்றும் உயர்கல்வி பயின்ற இளைஞர்களின் மத்தியில். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வேலையின்மை சதவீதம் சற்று அதிகமாகவே உள்ளது.
இந்திய பொருளாதாரத்தால் விவசாயம் அல்லாத துறைகளில் படித்த பட்டதாரிகளை போதுமான ஊதியம் கொண்ட பணிகளில் பணியமர்த்த முடியவில்லை. இது இந்தியாவின் வேலையின்மை திண்டாட்டத்தை பிரதிபளிக்கிறது. சீனாவில் வேலை இல்லா இளைஞர்களில் எண்ணிக்கை ஆண்டின் முதல் 2 மாதங்களில் மட்டும் 15.3% ஆக உயர்ந்துள்ளது. இது நகரங்களில் வசிக்கும் மக்கள் தொகையை விட 5.3% அதிகமாகும்.
கடந்த 2000 ஆம் ஆண்டை ஒப்பிட்டு பார்க்கையில் 15 முதல் 29 வயது வரையிலான வேலையில்லா இளைஞரின் எண்ணிக்கை 88.6%-ல் இருந்து 82.9% ஆக குறைந்துள்ளது. ஆனால் வேலையில்லா படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 54.2%-ல் இருந்து 65.7% ஆக உயர்ந்துள்ளது. இதில் இளம் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
அதன்படி 76.7% படித்த பட்டதாரி பெண்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது ஆண்களின் எண்ணிகையை விட 14% அதிகமாகும். கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக அளவில் பார்க்கையில் இந்தியாவில் தான் மிக குறைந்த அளவில் பெண்கள் வேலை செய்கின்றனர். அதன்படி வெறும் 25% பெண்கள் மட்டுமே வேலையில் உள்ளனர். கொரோனா நோய் தொற்றிற்கு பிறகு இந்த எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது.
மேலதிக செய்திகள்
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
ஐபிஎல் கிரிகெட் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கே.கே.ஆர்.