தமிழகத்தில் அதிகரிக்கும் புட்டாலம்மை: உருமாறிய வைரஸ் காரணமா?
தமிழகத்தில் இதுவரை 461 பேருக்கு புட்டாலம்மை அல்லது விளையாட்டம்மை எனப்படும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, இந்த மாதத்தில் மட்டும் 81 பேருக்கு தட்டம்மை, 264 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் மிக அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதுமே புட்டாலம்மை அதிகரித்து வருகிறது. இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் கூறுகையில், புட்டாலம்மையை ஏற்படுத்தும் மம்ப்ஸ் வகை வைரஸ் இத்தனை நாள்கள் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறது. அதற்கு மரணம் என்பதே இல்லை. இந்த அம்மை வியாதிகளால் பாதிக்கப்படும் குழந்தைகளை தனிமைப்படுத்தி வைப்பதே ஒரே தடுப்பு மருந்தாகும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தில் மக்கள் புட்டாலம்மை, தட்டம்மை, அம்மை, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை பதிவு செய்யலாம். இது பயனுள்ள தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாடு முழுவதும் எடுக்க உதவும். சளித்தொல்லை பாதிப்புகளையும் தெரிவிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்” என்றார் செல்வவிநாயகம்.
இதுகுறித்து காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜனனி சங்கர் கூறுகையில், பள்ளிக் குழந்தைகள் சிலருக்கு கன்னங்கள் வீங்கி புட்டாலம்மை எனப்படும் நோய் பாதிதப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால், அவை விரைவில் சரியாகி வருகின்றன என்கிறார். அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கருதப்படுகிறது.
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொது மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர்.பி.பரந்தாமன் கூறுகையில், புட்டாலம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பதற்கு வைரஸில் ஏற்படும் பிறழ்வும் ஒரு காரணமாக இருக்கலாம். “வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாக இருக்க வேண்டும், குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து அது தப்பித்து உடலுக்குள் செல்ல வேண்டும். வைரஸ் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் என்பதால் பாதிப்பு அதிகமிருக்காது என்றாலும் ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு சிரமம் ஏற்படலாம். அது சிலரின் உடல்நிலையை மோசமாக்கலாம்”என்றும் அவர் கூறினார்.
நோயின் தாக்கத்தைக் குறைக்கும் சில சிகிச்சைமுறைகளுடன், குழந்தையை தனிமைப்படுத்தி வைப்பதே இப்போதைக்கு உகந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.
புட்டாலம்மை என்றால் என்ன?
புட்டாலம்மையானது பொதுவாக உமிழ்நீர் சுரப்பிகளை பாதிக்கும் ஒரு வைரஸால் ஏற்படுகிறது. வீங்கிய சுரப்பிகள் வலியை ஏற்படுத்தலாம். புட்டாலம்மைக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. தடுப்பு நடவடிக்கையாக குழந்தைகளுக்கு தட்டம்மை, அம்மை மற்றும் ரூபெல்லா (எம்எம்ஆர்) தடுப்பூசி போடப்படுகிறது.
மேலதிக செய்திகள்
மக்களவை தேர்தல் 2024 – மதிமுக, விசிகவுக்கு சின்னம் ஒதுக்கீடு!
தமிழகத்தில் அதிகரிக்கும் புட்டாலம்மை: உருமாறிய வைரஸ் காரணமா?
பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த கோர விபத்தில் 10 பேர் பலி… ஜம்மு – காஷ்மீரில் பயங்கரம்
இந்தியாவில் படிக்காத இளைஞர்களை விட படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பு இல்லை – ஆய்வில் தகவல்
மே தினக் கூட்டத்தோடு தேர்தல் பிரசாரப் போர் ஆரம்பம்!
ஐபிஎல் கிரிகெட் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கே.கே.ஆர்.