மக்களவை தேர்தல் 2024 – மதிமுக, விசிகவுக்கு சின்னம் ஒதுக்கீடு!
மக்களவை தேர்தலில் போட்டியிடும் மதிமுக மற்றும் விசிக கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் 2 தொகுதிகளிலும் அக்கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் துரை வைகோ திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
மேலதிக செய்திகள்
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
ஐபிஎல் கிரிகெட் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கே.கே.ஆர்.
மே தினக் கூட்டத்தோடு தேர்தல் பிரசாரப் போர் ஆரம்பம்!
இந்தியாவில் படிக்காத இளைஞர்களை விட படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பு இல்லை – ஆய்வில் தகவல்
பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த கோர விபத்தில் 10 பேர் பலி… ஜம்மு – காஷ்மீரில் பயங்கரம்
தமிழகத்தில் அதிகரிக்கும் புட்டாலம்மை: உருமாறிய வைரஸ் காரணமா?