தேர்தல் விதிமீறல் : ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
தேர்தல் விதிமீறல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது லஞ்சம் கொடுத்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில், பாஜக ஆதரவுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவரை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது பையில் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்தார்.
இது தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி அருள், அறந்தாங்கி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், லஞ்சம் கொடுத்த குற்றத்திற்கான இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 171 ஈ உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தில்லைநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
முதலாவது ஜனாதிபதி தேர்தலே, அதில் நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் – பசிலிடம் ரணில் தெரிவிப்பு.
இரு வேறு இடங்களில் ஒரே ரயிலால் மோதப்பட்டு இருவர் பரிதாப மரணம்!
மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப மரணம்!
கிரிப்டோகரன்சி கிங் , பண மோசடிக்காக இருபத்தைந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்
கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ‘இந்தியா’ கூட்டணி இன்று போராட்டம்