வாக்கு சேகரித்த முதல்வரிடம் கேள்வி எழுப்பிய பெண்: ஈரோட்டில் பரபரப்பு..!
ஈரோட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை உழவர் சந்தை பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களிடையே திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்க்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலை ஓரத்தில் கடைவைத்து காய்கறி விற்பனை செய்து வரும் விஜயா முதல்வரிடம் தனக்கு மகளிர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
உரிய காரணமின்றி தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது என கூறினார். ”எனது கணவர் அரசுப் பணியாளர் அதனால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் (கணவர்) சாப்பிட்டால் மட்டும் போதுமா எனக்கு வயிறு நிறைந்து விடுமா?” என முதல்வரிடம் அந்தப் பெண் கேள்வி எழுப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலதிக செய்திகள்
முதலாவது ஜனாதிபதி தேர்தலே, அதில் நான்தான் ஜனாதிபதி வேட்பாளர் – பசிலிடம் ரணில் தெரிவிப்பு.
இரு வேறு இடங்களில் ஒரே ரயிலால் மோதப்பட்டு இருவர் பரிதாப மரணம்!
மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப மரணம்!
கிரிப்டோகரன்சி கிங் , பண மோசடிக்காக இருபத்தைந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்
கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ‘இந்தியா’ கூட்டணி இன்று போராட்டம்
தேர்தல் விதிமீறல் : ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு