இலங்கைத் திரைப்படங்கள் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்படும் : ரணில் விக்கிரமசிங்க
காலாவதியான திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றியமைத்து இலங்கையில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அபிவிருத்தி நிறுவனமாக கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதேவேளை, கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை நவீன தொழில்நுட்ப அறிவுடன் வலுவூட்டுவதற்கு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கி செல்ல திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளும் தயாராக வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவு அல்லது AI தொழிநுட்பம் இன்று உலகத் திரைப்படத்துறையில் இணைந்துள்ளதுடன், அதனை முன்னோக்கி நகர்த்தி இலங்கையில் முதலாவது AI திரைப்படத்தை தயாரிப்பதற்கு அரசாங்கம் ஆதரவை வழங்கும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற 20வது ரைகம் டெலிஸ் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்திகள்
கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை : மாணவர்கள்.
கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை : மாணவர்கள்.
ஏப்ரல் முட்டாள்கள் தினத்திற்கான வேர்கள் எங்கிருந்து தொடங்கியது?
“முஸ்லிம் எழுதிய `பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம்” – இனி யாருக்குச் சொந்தம்? – பினராயி விஜயன்.
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு நாமலிடம் தெரிவித்த பசில்!