மேற்குவங்கத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று… 5 பேர் பலி, 100 பேர் காயம்
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் வீசிய திடீர் சூறைக்காற்றால் கட்டடங்கள் சேதமடைந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஜல்பைகுரி பகுதியில் நேற்று திடீர் சூறைக்காற்று பலமாக வீசியது. இதில் விளைநிலங்கள்,குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.
அந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் செல்போன் கோபுரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. ஜல்பைகுரியில் காற்று வீசியதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டார்.
தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அனைத்து உதவிகளையும் செய்யப்படும் என்றும் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் இயல்புநிலைக்கு திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கனமழை மற்றும் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் செய்யவேண்டிய அனைத்து உதவிகளையும் துரிதமாக செய்ய ஆணையிட்டுள்ளதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மீட்புப்பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
மேலதிக செய்திகள்
கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை : மாணவர்கள்.
கார்த்திகைப் பூ என நாங்கள் அறிந்திருக்கவில்லை : மாணவர்கள்.
ஏப்ரல் முட்டாள்கள் தினத்திற்கான வேர்கள் எங்கிருந்து தொடங்கியது?
“முஸ்லிம் எழுதிய `பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம்” – இனி யாருக்குச் சொந்தம்? – பினராயி விஜயன்.
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு நாமலிடம் தெரிவித்த பசில்!
கடவுச்சீட்டு வழக்கிலிருந்து விமல் வீரவன்ச விடுதலை.
இலங்கைத் திரைப்படங்கள் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்படும் : ரணில் விக்கிரமசிங்க