‘வன்னிநேயம் புலமைப்பரிசில் திட்டம்-2023’ புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு.
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால், நியூசிலாந்து வன்னிநேயம் அமைப்பின் நிதிபங்களிப்பில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு வழங்கும் வகையில் ‘வன்னிநேயம் புலமைப்பரிசில்’ திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டது!
ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் இச் செயற்திட்டத்தின் 2023ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் கிடைத்த ஏராளமான விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் நேர்முகத்தேர்வு மூலமாக மிகத்தேவையுடையதும், கற்றலில் திறமைமையும் கொண்ட 8 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்!
குறித்த மாணவர்களில் ஒவொருவருக்கும் தலா 125,000/= பெறுமதியான புலமைப் பரிசில் மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாதாந்த நிதிவழங்கலாக/ மடிக்கணனியாக வழங்கி வைக்கப்பட்டது!
இந் நிகழ்வு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (30-03-2024) நடைபெற்றது! இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்பல்கலைக்கழக முன்னால் பீடாதிபதி பேராசிரியர் அ.அற்புதராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார்!
இந்நிகழ்வில் புலமை பரிசில் பெற வருகைதந்த மாணவர்கள் , பெற்றோர்கள், கிளிநொச்சி மாவட்ட உதவி மாவட்ட செயலர் திருமதி.சத்தியஜூவிதா, கரைச்சி பிரதேச சபை செயலாளர் திரு.செ.செல்வக்குமார், மற்றும் எமது சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் , சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்!