கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்துக்கு முன்பாக பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தால் கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம்பெற்றது.
திருகோணமலை அபயபுர சந்திக்கு முன்னால் ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணி அங்கிருந்து கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்துக்கு முன்னால் வந்தடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஆளுநரிடம் கையளித்தனர்.