ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: மைத்திரியின் வாக்குமூலம் வெளிச்சத்துக்கு – சீனாவால் கோபமடைந்த நாடு எது?
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியது யார் என்ற தகவலை இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அடையாளம் தெரியாத நபரே தன்னிடம் கூறினார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சி.ஐ.டியிடம் கூறியுள்ளார் என்று அறியமுடிகின்றது.
நல்லாட்சி அரசு சீனாவுடன் நெருங்கிச் செயற்பட்டது. அதன் காரணமாக, கோபமடைந்த நாடே இந்தத் தாக்குதலை நடத்தியது என்று அந்த நபர் மைத்திரியிடம் சொன்னதாக மைத்திரி சி.ஐ.டியிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தைச் சி.ஐ.டியினர் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கவுள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பின்னர் சட்டமா அதிபரின் ஊடாக அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.