ரோகித் அவுட்… கொண்டாடிய சி.எஸ்.கே. ரசிகர் அடித்து கொலை; நண்பர்கள் வெறிச்செயல்

கடந்த 27 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அனுமந்த்வாடி கிராமத்தை சேர்ந்த 63 வயதான திபிலேவும் (Tibile) அவரது நண்பருமான பலவந்த் ஜாஞ்ஜேவும் (balwant jhanjahe) டிவியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, 26 ரன்களில் மும்பை அணி வீரரான ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகரான திபிலே கொண்டாடினார். இதனால் பலவந்த் ஜாஞ்ஜேவுக்கும் திபிலேவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திபிலே கூறிய சில கருத்துகளால் ஜாஞ்சேவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஜாஞ்சே உடனே அந்த இடத்தில் இருந்து எழுந்து சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பின்னர், மருமகன் சாகர் என்பவரை அழைத்து கொண்டு திரும்பி வந்த ஜாஞ்சே, திபிலேவை அடித்து, உதைத்துள்ளார்.
மரப்பலகை மற்றும் கம்பு ஒன்றை வைத்து சாகர் கடுமையாக தாக்கினார். இதனால், திபிலே மயங்கி தரையில் சரிந்து விழுந்துள்ளார். இதன்பின் அவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி திபிலே உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திபிலேவின் நண்பர் மற்றும் மருமகன் சாகர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கிரிக்கெட் விளையாட்டுக்காக நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒருவரை கொலை செய்ய தூண்டும் அளவுக்கு சென்றது பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலதிக செய்திகள்
மைத்திரி வீசிய குண்டால் இலங்கையில் கொதி நிலை : சாம்பலின் அடியில் தீ
வித்தியா படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் ஒருவர் மரணம்!
அருணாச்சல்லில் 30 இடங்களுக்கு புதிய பெயரிட்ட சீனா.. மத்திய அரசு எச்சரிக்கை