கொலம்பிய இராணுவம் 5 டன் கொக்கைனைக் கைப்பற்றியது.
கரீபியன் கடலில் அதிவேக படகு ஒன்றை கொலம்பிய இராணுவ படகுகள் மற்றும் போர் விமானங்கள் துரத்திச் சென்று 5 டன் கொக்கைன் போதைப்பொருளை கைப்பற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 113 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கெய்ன் கையிருப்பு இந்த வருடத்தில் கொலம்பிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய கொக்கெய்ன் தொகை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கொலம்பியாவின் விமானப்படை மற்றும் கடற்படை மற்றும் அமெரிக்க விசேட அதிரடிப்படையின் தென் பிராந்திய பிரிவு இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அதிவேக படகில் இருந்தவர்கள் கொக்கெய்ன் பார்சல்களை கடலில் வீச ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட படகில் இருந்த மூன்று கொலம்பியர்கள் மற்றும் இரண்டு வெனிசுலா நாட்டவர்கள் மற்றும் இரண்டு ஹோண்டுராஸ் நாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.