மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உள்ள பாடசாலைகளுக்கு இலவச மதிய உணவு – சுசில் பிரேமஜயந்த.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட திறன் கொண்ட சிறுவர்கள் கல்வி கற்கும் 27 பாடசாலைகளில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (2) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.