பெண் ஒருவர் தனியாக பயணிக்க மிகவும் பொருத்தமான இடங்களில் இலங்கைக்கு முதல் இடம்.
பெண் ஒருவர் தனியாக பயணிக்க மிகவும் பொருத்தமான இடங்களில் இலங்கைக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
பிரபல பத்திரிக்கையான ‘டைம் அவுட்’ (timeout.com) நடத்திய சமீபத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது.
இந்த தரவரிசையில் பெண்கள் பாதுகாக்கப்படும் பன்முக கலாச்சார நாடுகளில் இளம் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பெரும்பாலும் 28 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தனியாக பயணம் செய்வதில் விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.
பெண் ஒருவர் தனியாக பயணிக்க மிகவும் பொருத்தமான இடங்களில் இரண்டாம் இடம் போர்ச்சுகலுக்கும், மூன்றாவது இடம் செக் குடியரசுக்கும், நான்காவது இடம் ஜப்பானுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் டைவ் செய்வதற்கு பாதுகாப்பான இடங்கள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரியம் மற்றும் நுவரெலியாவின் வசீகரம் மற்றும் மலை ரயில் பயணங்கள் போன்ற கவர்ச்சிகரமான இடங்கள் காரணமாக, தெற்காசிய நாடுகளில் வெளிநாட்டுப் பெண்கள் தனியாகப் பயணிப்பதற்கான சிறந்த இடமாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில் 05வது இடம் கவுதமாலாவுக்கும், 06வது இடம் கிரீசுக்கும், 07வது இடம் ஆஸ்திரேலியாவுக்கும் கிடைத்துள்ளது.