நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க முடியாது : மைத்திரி
ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03) மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி சந்தீப்த சூரியாராச்சியின் பிரேரணைக்கு அமைய இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரசேன சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் பற்றி மைத்திரிக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும்
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தார் என கத்தோலிக்க திருச்சபை நம்புவதாக அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
கட்டுவப்பிட்டியவில் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை அறியச் சென்ற பொலிஸ் மா அதிபர் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நாங்கள் ஒரு பை உலர் உணவுப் பொருட்களையும் கேட்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதும் தேவையில்லை. அவர்களுக்கான நீதியைத்தான் நாங்கள் கேட்கிறோம்,” என அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.