விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு
இடமாற்றம் பெற்றுச் செல்லும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஏ.சீ.அப்துல் ரசாக் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம்.ஜவாஹிர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக விசேட வைத்திய நிபுணர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாற்றம் பெற்றுச் சென்ற பொது வைத்திய நிபுணர் அஜித்குமார, சிறுபிள்ளை வைத்திய நிபுணர் திமுது சுபசிங்க, இழைய நோயியல் நிபுணர் அசந்தி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் புதிதாக நியமனம் பெற்று மாற்றலாகி வருகை தந்த வைத்திய நிபுணர்களான அர்சாத் அஹமட், அஹமட் பரீட், அமித் குலரெட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான நினைவுப் பரிசில்களும் கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டது.