அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்
அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ , தேர்தல் காரணமாக கைது செய்யக்கூடாது என கூறுவதற்கு விசாரணைக் கைதிகளுக்கு உரிமையில்லை என்று கூறினார்.தேர்தலுக்கு முன்பு, அரசியல் பிரமுகர் ஒருவர் கொலை செய்தால் கைது செய்யக்கூடாதா? கைது நடவடிக்கை துன்புறுத்தலாக அமையுமா? கொலை செய்துவிட்டு கைது செய்வது விதிமீறல் எனக்கூற முடியுமா? எனவும் அவர் வாதிட்டார்.
கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். கெஜ்ரிவாலை கைது செய்வதற்கான ஒரே நோக்கம், அவரை துன்புறுத்துவதற்கும், டெல்லியில் பா.ஜ.,வுக்கு சவாலாக பார்க்கப்படும் ஆம் ஆத்மியை முடக்குவதற்காகவும் தான் என வாதிட்டார். ஆம் ஆத்மி கட்சியை உடைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக குறிப்பிட்ட சிங்வி, கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
மேலதிக செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் போட்டியிட்டால் முழு ஆதரவு! – மொட்டு எம்.பி. வீரசிங்க கூறுகின்றார்.
தைவானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; குறைந்தது ஒன்பது பேர் பலி.
எந்த அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்துக்குத் தயார்! – முல்லைத்தீவில் சஜித் தெரிவிப்பு.