முயற்சிகள் தோல்வி..பசிலின் பலம் பூஜ்ஜியம்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக , பாராளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி பாராளுமன்றத்தை கலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் முற்றாக தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு ரீதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாகவும், தற்போதைக்கு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில், அவசர பொதுத் தேர்தலை நடத்துவதற்காக, நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, பசில் ராஜபக்ஷவுக்கு விசுவாசமானவர்கள் நிறைவேற்ற முயற்சித்துள்ளனர்.
ஆனால் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான எம்.பி.க்களை பாராளுமன்றத்தில் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் அந்த முயற்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளது.
“பொய் புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
குடிநீர் தொட்டியில் துர்நாற்றம்; திறந்து பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் – அதிர்ச்சி சம்பவம்!
அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்