திருட்டு மாடுகளை கொண்டு சென்ற யாழ்.பொலிஸ் உத்தியோகத்தர் STFடம் சிக்கினார்!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 8 மாடுகளை திருடி இறைச்சிக்காக எடுத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (3) கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அந்த வாகனத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருட்டு மாடுகளை ஏற்றிச் செல்வதாக யாழ்.காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமின் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த வீதியில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையின் போது யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இருந்து திருடப்பட்ட 8 மாடுகளை இறச்சிக்காக யாழ்ப்பாணம் மண்டதீவுக்கு ஏற்றிச் சென்ற வாகனத்தை கைது செய்ய முடிந்துள்ளது.
விசேட அதிரடிப்படையினர் வாகனத்தை சுற்றி வளைத்ததும், வாகனத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் , மாடு ஏற்றிச் சென்ற லொறியை பிடித்து பொலிசுக்கு கொண்டு செல்வது போன்று நடித்துள்ளார். ஆனால், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் விசாரித்த போது பொலிஸ் உத்தியோகத்தர் கூறியது பொய் எனத் தெரியவந்துள்ளது.