பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏ சார்பில் விளக்க அறிக்கை
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில், தேசிய புலனாய்வு முகமை சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக சிவமோகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான சாய் பிரசாத்திடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபருடன் இவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.இந்த நிலையில், என்.ஐ.ஏ. சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில், குண்டுவெடிப்பை நடத்திய முக்கிய நபரின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரது பெயர் முசாவிர் ஹூசைன் சாஹிப் என்பது தெரியவந்திருப்பதாகவும் கூறியுள்ளது.இந்த சதிச் செயலில் அவருக்கு உடந்தையாக இருந்தவர் அப்துல் மதீன் தாஹா எனவும், இருவருமே கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறியுள்ளது.
இவர்களுக்கு உதவிய முசாமில் ஷரீப் என்பவர் கடந்த மாதம் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகவும், தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைதுசெய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு தொடர்புடைய நபர்களை என்.ஐ.ஏ.விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.சாட்சிகளின் அடையாளம் குறித்த எந்தத் தகவலும் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதோடு, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்பதால் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் என்.ஐ.ஏ.கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக செய்திகள்
உலகப் பொருளாதார மன்றம் ஜீவன் தொண்டமானை உலகளாவிய தலைவராக நியமித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் அகிலனுக்கு அழைப்பாணை!
இத்தகைய முன்மொழிவுகள் இயல்பானவை, பொது ஜனாதிபதி வேட்பாளர் முன்மொழிவு தொடர்பில் மனோ கணேசன்.