கல்வி அமைச்சின் இணையதளம் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவராலேயே ஹேக் செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உயர்தர மாணவர் ஒருவரால் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு கற்கும் மாணவர், கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பொன்றை வெளியிட்டு, இணையத்தளத்தில் உள்ள பாதுகாப்பு பிரச்சினையை சுட்டிக்காட்டவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, இலங்கை கணினி அவசர பதில் மன்றம் (SLCERT) மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRC) இணைந்து விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், குறித்த இணையத்தளத்தை விரைவில் மீளமைக்க சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றது.இதற்கு கல்வி அமைச்சும் வருத்தம் தெரிவித்துள்ளது.