சஜித் தலைமை விவாதத்திற்கு ரெடி.. திசைகாட்டி (JVP) மௌனம் – SJB
பொருளாதாரத்தை எப்படி வெல்வது என்பது குறித்து சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் அணுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (JVP) இடையேயான விவாதத்திற்கான தேதி அல்லது இடத்தை தேசிய மக்கள் சக்தி (JVP) இன்னும் உறுதிப்படுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கூறுகிறது.
தொலைக்காட்சி அலைவரிசையில் இந்த விவாதத்தை நடத்துவதன் மூலம் மக்கள் இலகுவாகப் பார்க்க முடியும் என அதன் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அதன்படி, சேனல் மற்றும் நேரத்தை விரைவில் தெரிவிக்குமாறு தேசிய மக்கள் சக்தி (JVP) யிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி பொருளாதாரக் குழுவுடன் (SJB) , தேசிய மக்கள் சக்தி (JVP) பொருளாதாரக் குழுவை விவாதத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
இது வரை தேசிய மக்கள் சக்தி (JVP) தங்களின் நேரத்தையும் தொலைக் காட்சி அலைவரிசையையும் குறிப்பிடவில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே தேசிய மக்கள் சக்தி (JVP) யின் பொருளாதாரக் குழுவையோ அல்லது கட்சித் தலைவரையோ விவாதத்திற்கு அனுப்புமாறு சவால் விடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.