ஓமந்தையில் ரயிலுடன் பிக்கப் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!

வவுனியா – ஓமந்தை, பன்றிகெய்தகுளம் பகுதியில் ரயிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியாயூடாக யாழ்ப்பாணம் நோக்கி ரயில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில், ஓமந்தை – பன்றிகெய்தகுளம் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முயன்ற பிக்கப் ரக வாகனம் ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் பிக்கப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்
மன்னார், நானாட்டன் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ராஜன் நிரோஜன் என்பரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.