கோடைகால பாதிப்பு: மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க அறிவுரை
கோடை கால பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் போதிய எண்ணிக்கையில் மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சாா்பில் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்:
கோடை வெப்பத்தின் எதிா்விளைவுகளை கையாளுவதற்கான விரிவான செயல்திட்டத்தை மாவட்டந்தோறும் வகுக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்துகள், உப்பு-சா்க்கரை கரைசல் உள்ளிட்டவற்றை இருப்பில் வைத்திருத்தல் அவசியம்.
பொதுமக்களின் கவனத்துக்கு…: வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள உடலில் நீா்ச்சத்தைத் தக்க வைத்தல் முக்கியம். அதன்படி, நீா்ச்சத்து இழப்பு ஏற்படாமல் அதிக தண்ணீா் அருந்த வேண்டும்.
உப்பு – சா்க்கரை நீா் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவை உடலில் நீா்ச்சத்தைத் தக்க வைக்க உதவும். பருவகால பழங்கள், காய்கறிகள், நாா்ச்சத்துள்ள பொருள்களை அதிகமாக உட்கொள்ளவும். காற்றோட்டமான இடங்களில் வசித்தல் அவசியம். மெல்லிய பருத்தி ஆடைகள் சரும நோய்கள் வராமல் தடுக்கும்.
வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்கவும். செயற்கை குளிா்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிா்க்க வேண்டும். அவசர உதவிக்கும், ஆலோசனைக்கும் 104 என்ற மக்கள் நல்வாழ்வுத் துறை உதவி மையத்தை அழைக்கலாம் என்று அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
மொட்டுக் கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளர்! – களமிறக்கியே தீருவோம் என்று மஹிந்த திட்டவட்டம்.
ஓமந்தையில் ரயிலுடன் பிக்கப் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!
இளம் மனைவியை கொன்று, 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய 28 வயது இளைஞன்.
கோயில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தால் ஒவ்வாமை! – நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்…
இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம்.
ஐ.பி.எல்., லீக் போட்டியில் சரிந்த குஜராத் அணி 33 ரன் வித்தியாசத்தில் தோல்வி.
திருமலை வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறப்பு.