“லிவ் இன்” உறவில் பிரிந்தாலும் ஜீவனாம்சம் தர வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!
லிவ் இன் உறவில் தம்பதி பிரிந்தாலும், பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சில பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அந்த பெண் பராமரிப்பு செலவு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு மாதம் ரூ.1,500 பராமரிப்பு செலவுக்கு தர வேண்டும் என்று அவரது துணைக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அந்த ஆண் உயர் நீதிமறத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், தற்போதைய நவீன வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் “லிவ் வின்” உறவு சகஜமாகிவிட்டது. இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவும் இருந்து வருகிறது.
இந்த தம்பதி நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உறவில் குழந்தையும் பிறந்துள்ளது. சட்டபூர்வமாக திருமணம் செய்யாவிட்டாலும் அந்த பெண்ணுக்கு ஆண் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலதிக செய்திகள்
மொட்டுக் கட்சி சார்பில் மிகச் சிறந்த வேட்பாளர்! – களமிறக்கியே தீருவோம் என்று மஹிந்த திட்டவட்டம்.
ஓமந்தையில் ரயிலுடன் பிக்கப் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!
இளம் மனைவியை கொன்று, 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய 28 வயது இளைஞன்.
கோயில் திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தால் ஒவ்வாமை! – நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்…
இஸ்ரேல் பிரதமர் பதவி விலக போராட்டம்.
ஐ.பி.எல்., லீக் போட்டியில் சரிந்த குஜராத் அணி 33 ரன் வித்தியாசத்தில் தோல்வி.
திருமலை வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை திறப்பு.
கோடைகால பாதிப்பு: மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க அறிவுரை