கடல் வழியாக பயணித்த படகு கவிழ்ந்த விபத்தில் 90 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் காலரா பாதிப்பிலிருந்து தப்பி பிழைப்பதற்காக, கடல் வழியாக பயணித்த படகு கவிழ்ந்த விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த அக்டோபரில் இருந்தே காலரா பாதிப்பு நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலரா நோயால் 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், சுமார் 130 பேர்களுடன் புறப்பட்ட, சிறு படகு, நம்புலா மாகாணத்திலிருந்து ஒரு தீவை அடைய முயன்றபோது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர். சிறு படகில் அதிகமானோர் பயணித்தது விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.