பிரான்ஸ் தமிழ் இளைஞனை நிச்சயதார்த்தம் செய்து, கொள்ளையடித்த கிளிநொச்சி பெண்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து 42 பவுண் தங்கம் மற்றும் 60 இலட்சம் ரூபா ரொக்கப் பணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்ட கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியை தேடி, நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இளைஞன் கிளிநொச்சிக்கு வந்த போது காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது .
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் இருவரும் ஒருவரையொருவர் அறிமுகமானதாகவும், தனது பெற்றோர் போரில் இறந்த பின்னர் தனது மூத்த சகோதரியுடன் தான் வாழ்ந்து வருவதாகவும் யுவதி பிரான்ஸ் வாழ் தமிழ் இளைஞரிடம் கூறியுள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட ஈர்ப்பு நிச்சயதார்த்தமாகி ஒன்றரை வருடங்களில் கிளிநொச்சி யுவதிக்கு பணம், நகை, என பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் பிரெஞ்சு இளைஞர்.
இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதம் திருமணத்தை நடத்த திட்டமிடுவதற்காக பிரெஞ்சு பிரஜையான இளைஞன் கிளிநொச்சிக்கு வந்துள்ளார். அவர் அங்கு வந்து யுவுதியை சந்திக்க முயன்றபோது, அந்தப் பெண் அவர் இருந்து பகுதியில் இருந்து காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பில் அவர் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் பெரும் முயற்சி எடுத்து யுவதியை கைது செய்துள்ளனர். அவரை கைது செய்தபோது கிளிநொச்சியில் இருந்து வெகு தொலைவில் உள்ள கிராமத்தில் திருமணமாகி தனியார் பஸ் நடத்துனர் ஒருவருடைய மனைவியாகி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டவர் யுவதிக்கு வழங்கிய பணம் மற்றும் நகைகள் தொடர்பான விபரங்களை பொலிஸாரிடம் சமர்பித்த நிலையில், அவரிடம் இருந்து 15 தங்க பவுன் மற்றும் 5 இலட்சம் ரூபா ரொக்கத்தை யுவதியிடமிருந்து , இளைஞர் பெற்றுக்கொண்டுள்ளார். மீதி பணம் மற்றும் நகைகளை போலீசாரிடம் திருப்பி கொடுக்கவும் சம்மதித்துள்ளார்.
அந்த இளம்பெண் தனக்குக் கொடுத்த பொருட்களில் இருந்து கிடைத்ததை திரும்பப் பெற்றுக்கொண்டு விரக்தியுடன் பிரான்ஸ் திரும்பியுள்ளான் அந்த இளைஞன்.