சிறப்புச் சலுகை கிடையாது- கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி
முதலமைச்சராக இருப்பதற்காகவெல்லாம் எந்த ஒரு சிறப்பு சலுகையும் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கைது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் தலையிட முடியாது என மறுத்துவிட்டது. மேலும், தேர்தல் நேரத்தை கணக்கிட்டு அமலாக்கத்துறை தன்னை கைது செய்துள்ளது என்ற கெஜ்ரிவாலின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், கைது செய்யப்பட்டதில் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் பிரச்னைகளை நீதிமன்றத்தின் முன்பு கொண்டு வர முடியாது என கூறிய டெல்லி உயர்நீதிமன்றம், முதலமைச்சர் என்ற காரணத்தால் கெஜ்ரிவாலுக்கு எந்த ஒரு சிறப்புச் சலுகையும் வழங்க முடியாது என்றும் கூறியுள்ளது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம்
கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
தொலைபேசியின் 80% த்துடன் புதிய சின்னத்தில் , ரணில் ஜனாதிபதி தேர்தலுக்கு?
MGR அவர்களது நிழலான ஆர்.எம்.வீரப்பன் மறைந்தார்
ரணிலுக்கு ஆதரவு மொட்டு பெரும்பான்மையை காட்டுமாறு ரஞ்சித் பண்டார, பிரசன்னாவுக்கு சவால்!
ஜனாதிபதி வேட்பாளர் டெபாசிட் தொகை 25 இலட்சம் ரூபாவாக உயர்கிறது.
கட்டண அடிப்படையில் மருத்துவ மாணவர்களை சேர்க்க அமைச்சரவை ஒப்புதல்.
779 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு.
தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து: 12 பேர் பலி.
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி முறையை நடைமுறைப்படுத்தக்கோரி, போராட்டம்.