பகிரங்க விவாதத்துக்கு வரலாம்? நாங்கள் ரெடி, நீங்கள்? : சஜித்தின் சவால் (Video)
அவதூறு பேச்சு, சாக்கடை அரசியல் ஆகியவற்றைத் தவிர்த்து எதிர்கால நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் பற்றி விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
SJBயின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலம் குறித்தும், முன்வைக்கப்படும் மாற்று வழிகள் குறித்தும் எந்த நேரத்திலும் விவாதம் நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும், அதிகாரம் இல்லாத காலத்தில் மக்களுக்கு ஆற்றிய சேவை குறித்தும் பேச வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
சக்வல நட்புறவு வகுப்பறைத் திட்டத்தின் 148ஆவது கட்டத்தின் கீழ் , புத்தளம் ஆனமடுவ கன்னங்கர மாதிரிக் கல்லூரிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான வகுப்பறையை வழங்கும் நிகழ்வில் நேற்று (09) கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர், தானும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவும் விவாதத்திற்கு தயார் என்றார்.
வைத்தியசாலை உபகரணங்கள், வசதியான வகுப்பறை உபகரணங்கள், பேரூந்துகள் வழங்குவது பிரிவினையை ஏற்படுத்துவதாகக் கூறி எமது நாட்டில் சிலர் அதனை எதிர்த்து தனக்கு பல்வேறு புனைப்பெயர்களை சூட்டி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான புனைப்பெயர் சூட்டியவர்களின் பாடசாலைகளுக்கும் பேரூந்துகளை வழங்கியதாகவும், அவற்றை நன்கொடையாக வழங்கிய பின்னரும் பஸ் பழுதடைந்துள்ளதாக பொய்யான செய்திகளை பரப்பி கபட நாடகங்களை மேற்கொள்வதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் பெண் வேட்பாளர்கள் இல்லை!
கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
‘6 வருடங்களாக 9 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன’- போலீசார் அறிக்கையால் அதிர்ந்த கோர்ட்!
சிறப்புச் சலுகை கிடையாது- கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி முறையை நடைமுறைப்படுத்தக்கோரி, போராட்டம்.
தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து: 12 பேர் பலி.
கட்டண அடிப்படையில் மருத்துவ மாணவர்களை சேர்க்க அமைச்சரவை ஒப்புதல்.
779 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு.
ஜனாதிபதி வேட்பாளர் டெபாசிட் தொகை 25 இலட்சம் ரூபாவாக உயர்கிறது.
ஜனாதிபதி வேட்பாளர் டெபாசிட் தொகை 25 இலட்சம் ரூபாவாக உயர்கிறது.
ரணிலுக்கு ஆதரவான மொட்டு பெரும்பான்மையை காட்டுமாறு ரஞ்சித் பண்டார, பிரசன்னாவுக்கு சவால்!
MGR அவர்களது நிழலான ஆர்.எம்.வீரப்பன் மறைந்தார்
தொலைபேசியின் 80% த்துடன் புதிய சின்னத்தில் , ரணில் ஜனாதிபதி தேர்தலுக்கு?