யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு கிருஸ்ணேந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தவறான தகவல்களை வழங்கி நீதிமன்றை பிழையாக வழிநடத்தியதாக தெரிவித்தே இந்த வழக்கு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாநகர ஆணையாளருக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது என்று நீதிமன்ற வட்டாரங்களிலிருந்து தெரிவருகின்றது.