ஹரியாணா: பள்ளி பேருந்து கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி
ஹரியாணாவின் மகேந்திரகரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
கனினா நகரில் வாகனத்தை முந்திச் செல்லும்போது பேருந்து கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
ஓட்டுநர் பேருந்தை வேகமான ஓட்டியதால் பேருந்து கவிழ்ந்துள்ளது. பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும், அதற்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு கொண்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியாணா மாநில கல்வி அமைச்சர் சீமா த்ரிகா மகேந்திரகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
மேலதிக செய்திகள்
புத்தாண்டு சுபவேளை பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.
யாழில் காய்ச்சலால் மாணவி சாவு!
யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
மொட்டுவை விட்டு வெளியேறியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! – அரசியல் குழு தீர்மானம்.
தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம்: பின்னணியில் ராஜபக்சக்களா? – சுமந்திரன் எம்.பி. சந்தேகம்.
யாழ்ப்பாணத்தில் புற்றுநோயால் கடந்த வருடம் மட்டும் 71 பேர் சாவு.