நெல்லையில் ராகுல்… மதுரையில் அமித்ஷா… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் தேசிய கட்சி தலைவர்கள்..!
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று பரப்புரை மேற்கொள்ள வருகை தருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதன்படி, ஏப்ரல் 4, 5 ஆம் தேதிகளில் மதுரை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அமித் ஷா பரப்புரை மேற்கொள் திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
மதுரையில் அமித் ஷா இன்று பரப்புரை
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வர இருக்கிறார். இதற்காக, உத்தர பிரதேசத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்படும் அமித் ஷா, இன்று மாலை 4:15 மணிக்கு மதுரை விமான நிலையம் வரவுள்ளார்.
மாலை 4:50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் செல்லும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் செல்கிறார். மாலை 5:05 மணிக்கு, கோட்டை பைரவர் கோயில், சத்தியகிரீஸ்வரர் கோயிலில் அமித்ஷா வழிபாடு நடத்தவுள்ளார்.
மீண்டும், மாலை 6.10 க்கு மதுரை விமான நிலையம் வரவுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, மாலை 6:20 மணிக்கு மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து வாகன பேரணி நடத்த இருக்கிறார். பெரியார் பேருந்து நிலையத்தில் தொடங்கும் பேரணி, நகைக்கடை பஜார் வழியாகச் சென்று இரவு 7.05 மணிக்கு மதுரை விளக்குத்தூணில் நிறைவடைகிறது. இதையடுத்து, இரவு 7:15 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அமித் ஷா செல்லவுள்ளார்.
நெல்லையில் ராகுல் இன்று பரப்புரை
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இன்று தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். மாலை 3:50 மணிக்கு நெல்லைக்கு வர இருக்கும் ராகுல் காந்தி, மாலை 4 மணிக்கு, நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ராகுல், மு.க. ஸ்டாலின் ஒரே மேடையில் பரப்புரை
அங்கிருந்து கோவை புறப்படும் ராகுல் காந்தி, செட்டிபாளையத்தில், இரவு 7 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கூட்டாக பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். கோவை திமுக வேட்பாளர் ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளனர். ராகுல் பரப்புரையை யொட்டி 2,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிக செய்திகள்
அம்பிட்டிய சுமணரதன தேரருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ்!
அவிசாவளை ஹோட்டல் அறையில் 23 வயது இளம்பெண் மரணம் : சந்தேக நபர் கைது.
மோடியை சந்திக்க வருகிறார் எலான் மஸ்க்!
சு.கவின் அதிகாரம் தற்போது யார் வசம்? – 18 ஆம் திகதி கூடுகின்றது தேர்தல் ஆணைக்குழு.
இன்னும் 4 மாதங்களில் அரசியலுக்குக் ‘குட்பாய்’ – மொட்டு எம்.பி. விமலவீர அறிவிப்பு.
என்யுஎஸ் ஆய்வு: கொவிட்-19 தடுப்பூசி வீரியம் மூத்தோரிடையே விரைவாக குறைகிறது.
$12.5 பி. மோசடி வழக்கு: வியட்னாமியப் பெருஞ்செல்வந்தருக்கு மரண தண்டனை.
சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்க சிங்கப்பூர் அரசு கடப்பாடு கொண்டுள்ளது: சண்முகம்.
இந்தியாவின் 6,000 ஊழியர்கள் மே மாதத்திற்குள் இஸ்ரேலை அடைவர்.
தென் கொரியாவின் ஆளும் கட்சிக்கு கடும் தோல்வி.
மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி.
நடிகர் ரஜினியின் ஆதரவை கேட்கும் முயற்சியில், பா.ஜ.க.
தமிழ்ப் பொது வேட்பாளர் யார்? யாழில் இன்று முக்கிய சந்திப்பு.
கக்குவான் இருமல் மீண்டும் தீவிர பரவல்.
இந்தியாவில் நிகழும் 80% இறப்பிற்கு காரணமாக இருக்கும் 5 நோய்கள்