கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கிய இளம் தலைவர் ராகுல் காந்தி!
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஈஸ்வரசாமி, கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த இளம் தலைவர் ராகுல் காந்தி, கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக கடைக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்பு கடையில் ஒன்றில் இனிப்பு வாங்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராகுல்காந்தியும் இந்த விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து செட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு காரில் சிங்காநல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, தனது காரை சாலையோரம் நிறுத்தச் சொன்ன ராகுல், அங்கிருந்த ஒரு இனிப்பு கடைக்கு சென்றார். அங்கு ஒரு கிலோ மைசூர்பாகு, ஒரு கிலோ ஜிலேபி வாங்கினார். யாருக்காக இனிப்பு வாங்குகிறீகள் சார்? என்று கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் கேட்க, அப்போது இனிப்பு வகைகளுக்கான கட்டணம் முழுவதையும் தானே கொடுத்த ராகுல், சற்றும் யோசிக்காமல் “என் சகோதரர் ஸ்டாலினுக்கு தான்” என்று பதிலளிக்கிறார்.
பின்னர்,கைகுலுக்கி வரவேற்ற கடையின் உரிமையாளர், அந்த கடையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் குழுவாக ராகுல்காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்ட ராகுல், இனிப்பு கடையில் வாங்கிய இனிப்பு வகைகளை பேப்பர் கேரி பேக்கில் போட்டு யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக தானே வைத்துக்கொண்டதால் உடன் வந்தவர்கள் யாருக்கு இந்த இனிப்பு வகைகள் என அவரிடம் கேட்க முடியாமல் ஆச்சரியத்துடன் தவித்தனர்.
யாரிடமும் கொடுக்காமல் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு தானே கையில் வைத்துக்கொண்டும் வந்த இனிப்பை பொதுக்கூட்ட மேடையை அடைந்ததும், அங்கு அவரை வரவேற்ற, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அந்த இனிப்பு வகை கேரி பேக்கை கொடுத்து ராகுல் காந்தி மகிழ்ந்தார். சகோதரர் ராகுல் கொடுத்த இனிப்பு வகைகளை முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.
அப்போதுதான் உடன் வந்தவர்கள் முதல்வருக்காக சாலையோரம் காரை நிறுத்திவிட்டு சாலையின் குறுக்கே இருந்த கான்கிரீட் தடுப்புச் சுவரை தாண்டிச்சென்று ராகுல்காந்தி இனிப்பு வாங்கினாரா என அனைவரும் ஆச்சரியமாகவும், பெருமையாகவும் பேசினர்.
முன்னறிவிப்பின்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் திடீர் மற்றும் வருகையால் இனிப்பு கடையின் உரிமையாளர் பாபு அதிர்ச்சி அடைந்தார்.
“ராகுல் காந்தி வந்தபோது நாங்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தோம். அவர் கோயம்புத்தூர் பொதுக்கூட்டத்திற்கு வந்திருக்கலாம். அவர் எங்கள் கடையில் மைசூர் பாக் வாங்கியது மற்ற இனிப்புகளையும் சுவைத்து பார்த்தது இதையெல்லாம்விட எங்கள் கடைக்கு வந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் ஊழியர்களும் மகிழ்ச்சியடைந்தனர். அவர் 25-30 நிமிடங்கள் இங்கே இருந்தார் என தெரிவித்தார்.
இந்த விடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, தமிழகத்தில் தொடர் தேர்தல் பிரசாரத்துக்கு இனிமை சேர்க்கும் விதமாக எனது சகோதரர் ஸ்டாலினுக்கு புகழ்பெற்ற மைசூர் பாக்கை சிறிது வாங்கி கொடுத்து மகிழ்ந்தேன் என்றும், தமிழக மக்களுடன் அவர் பகிர்ந்து கொள்ளும் அன்பான உறவைக் கொண்டாடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
2019 பொதுத் தேர்தலில், காங்கிரஸ்-திமுக தலைமையிலான கூட்டணி மாநிலத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் 38 இடங்களை வென்றது, அதே நேரத்தில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
மேலதிக செய்திகள்
ராஜபக்ச பட்டாளத்தின் அரசியலுக்கு வரும் தேர்தல்களில் முடிவு கட்டுவோம்! – சஜித் அணி சூளுரை.
சஜித் மற்றும் அனுரவின் பட்டப்படிப்புகளை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் : நவின் திஸாநாயக்க.
குருநாகல் வைத்தியசாலையில் கோவிட் மரணம்.
கோழைகள் போல் ஓடி ஒளியாமல் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்! – அநுரவுக்கு சஜித் மீண்டும் சவால்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கான முதல் சந்திப்பே ஏமாற்றம்! – விக்கி மாத்திரம் பங்கேற்பு.