மேல்மாகாணத்தில் கைத்துப்பாக்கி அணி
மேல்மாகாணத்தில் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக கைத்துப்பாக்கி அணிகள் அடங்கிய விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணியொன்று இந்த நாட்களில் விசேட பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் மேற்பார்வையில் விசேட பயிற்சிகளை மேற்கொண்டு வரும் இந்தக் குழுவினர் விசேட தாக்குதல் மோட்டார் சைக்கிள் அணியாக களம் இறங்கவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு உடனடி பதிலடி கொடுக்க இந்தக் குழுக்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், குழுவிற்கு விசேட சீருடைகளும் வழங்கப்படும் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் திறமையான அதிகாரிகளை இந்தப் பிரிவில் இணைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மோட்டார் சைக்கிள் தாக்குதல் குழுக்கள் ஆரம்ப கட்டமாக கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்திய பிரிவுகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன.