மட்டன் குழம்பு தேவையான பொருள்கள்.
மட்டன் – 3/4 kg
சின்ன வெங்காயம் – 250 gram
கொத்தமல்லி – 100 gram
காய்ந்த மிளகாய் – 15
தேங்காய் துருவல் – 1 மூடி
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பூண்டு – 10 பல்
இஞ்சி – விரல் நீள துண்டு
நல்லெண்ணெய் – 100 gram
உப்பு – தேவையான அளவு
சோம்பு – 1 ஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
அன்னாசி பூ – 2
செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மல்லி, மிளகாய், மிளகு, சீரகம் போட்டு வறுத்து ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
பின்பு அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தையும் வதக்கி அதையும் அரைத்து கொள்ளவும்.
சோம்பு ,பட்டை, கிராம்பு, ஏலக்காய் , அன்னாசி பூ, இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பின்பு மண்பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் கறியை போட்டு நன்கு வதக்கி கறி வேகுறதுக்கு தேவைாயன அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
அதனுடன் அரைத்த இஞ்சி, பூண்டு, அரைத்த மல்லி மிளகாய் விழுது, அரைத்த சின்ன வெங்காய விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கறியை நன்கு வேகவிடவும்.
கறி நன்கு வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து மசாலா வாசனை போனவுடன் இறக்கி வைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ,கருவேப்பிலை, மல்லி இலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றினால் கமகமணு மணக்கும் கிராமத்து ஆட்டுகறி குழம்பு ரெடி